தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கௌரவமாய் வரவேற்கின்றோம்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்காக தலைவர் மற்றும் அங்கத்தவர்களை நியமித்தல்.

அங்கத்தவர்களை நியமித்தல். அரசியல் யாப்பின் 21 ஆவது சீர்திருத்தத்திற்கு அமைய தாபிக்கப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்காக அதிமேன்மை தங்கிய ஜனாதிபதியினால் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையிலான 10 அங்கத்தவர்களைக் கொண்ட அரசியல் அமைப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந் நியமனத்திற்கு அமைய தலைவர் மற்றும் கீழ் குறிப்பிடப்பட்ட அங்கத்தவர்கள் பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்தில் 2023 மே மாதம் 16 ஆம் திகதி கடமைகளை ஆரம்பித்தனர் தலைவர் திரு. ரூடவ்.டப்ளியூ..எம். லலித் ஏகநாயக்க (ஓய்வூ பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஏழு அங்கத்தவர்கள் அடங்குவதுடன் மேலும் இரு அங்கத்தவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். 2022 ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அமைப்பு பேரவையின் 21 சீர்திருத்தத்தின் மூலம் 09 சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க எதிர்பார்க்கப்பட்டன. தேசிய பொலிஸ் ஆணைக்குழு இவ் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒன்பதில் ஒன்று என்பதுடன் இலங்கை பொலிசார் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விரிவான அதிகாரங்களைக் கொண்ட மேற்பார்வைப் பணிகள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுவாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு முதல் தடவையாக தாபிக்கப்பட்டது 17 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் கீழ் 2002 ஆம் ஆண்டில் என்பதுடன் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அமைய இவ் அதிகார உள்ளீட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொலிஸ் சேவைக்காக சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்கும் அடிப்படை நோக்கமாக அமைந்தது பொலிஸ் திணைக்களம் அல்லது பொலிஸ் சேவையினை அரசியல்மயம் அற்றதாக மாற்றியமைத்து நாட்டின் சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதாகும். 21 ஆவது சீர்திருத்தத்தின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமைய பொலிஸ் சேவையின் பொலிசார் தொடர்பில் விரிவான அதிகாரங்ள் கிடைக்கின்றன. அதாவது பொலிஸ்மா அதிபரைத் தவிர பொலிஸ் உத்தியோகத்தர்களை நியிமித்தல், பதவி உயர்வு, இடமாற்றம், சேவையில் இருந்து இடைநிறுத்துதல் மற்றும் ஒழுக்காற்று செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் சேவைக்கு எதிராக பொது மக்களினால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை ஏற்றுக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் நிவாரணம் வழங்குவது ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும். இதற்கு மேலதிகமாக மேற்கூறப்பட்ட பணிகளுக்காக செயற்பாட்டு ஒழுங்குகளை வகுத்தல், பயிற்சி மற்றும் பொலிஸ் சேவையின் வினைத்திறன் மற்றும் சுயாதீனத் தன்மையினை விருத்தி செய்தல், தேசிய மற்றும் மாகாணப் பிரிவில் ஆயூதங்கள், வெடி பொருட்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் தன்மை மற்றும் வகைகளை நிச்சயித்தல், ஒழங்குக் கோவைகள் மற்றும் ஒழுக்காற்று செயற்பாடுகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அனைத்து விடயங்களுக்காகவும் உரிய செயற்பாடுகளை மேற்கொள்வது பொலிஸ் ஆணைக்குழுவின் விடயப்பரப்பில் அடங்கியுள்ள பொறுப்புக்களாகும்.

National Police Commission, Bolock 09, BMICH Premises, Bauddhaloka Mawatha, Colombo 07, Sri Lanka.

தற்போதைய ஆணைக்குழு

திரு E.W.M.லலித்   ஏகநாயக
தலைவர்
திரு E.W.M. லலித் ஏகநாயக
அம்மணி D.K. ரேணுகா ஏகநாயக
தலைவர்
அம்மணி D.K.ரேணுகா ஏகநாயக
திரு K.கருணாகரன்
தலைவர்
திரு K.கருணாகரன்
திரு.  தில்சான் கபில ஜெயசூர்ய
தலைவர்
திரு. தில்சான் கபில ஜெயசூர்ய
திரு. A.A.M இல்லியாஸ்
தலைவர்
திரு. A.A.M இல்லியாஸ்d
நியமிக்க பட வேண்டும் அங்கத்தவர்
தலைவர்
நியமிக்க பட வேண்டும் அங்கத்தவர்
நியமிக்க பட வேண்டும் அங்கத்தவர்
தலைவர்
நியமிக்க பட வேண்டும் அங்கத்தவர்
அம்மணி தமரா D. பெரேரா
Secretary
அம்மணி தமரா D. பெரேரா

தலைவர்

திரு. E.W.M. லலித் ஏகநாயக்க (ஓய்வூ பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி)

அங்கத்தவர்கள்

திருமதி D.K. ரேணுகா ஏகநாயக்க (ஓய்வூ பெற்ற அமைச்சின் செயலாளர்)
திரு. கனபதிப்பிள்ளை கருணாகரன் (ஓய்வூ பெற்ற மாவட்ட செயலாளர்)
திரு. தில்சான் கபில ஜ ஜெயசூர்ய (சட்டத்தரணி)
திரு. A.A.M. இல்லியாஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி)

சேவைகள்

எமது சேவைகள்

welcome

මහජන පැමිණිලි කළමනාකරණ පද්ධතියේ අන්තර්ජාල බිහි දොරට සාදරයෙන් පිලිගනිමු

பொதுமக்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையின் இணைய நுழைவாயிலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Welcome to the web portal of Public Complaints Management System

தகவலுக்கான உரிமை - சட்டம்

தகவல் உத்தியோகத்தர்கள்

தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவதற்கான ஆரம்ப கோரிக்கையினை தகவல் அறியும் உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கவும்.

பெயர் : திருமதி W.M.D.K விக்கிரமசிங்க சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் தகவல் உத்தியோகத்தர்

தொலைபேசி : 0112166505

பொது மக்கள் முறையீட்டிற்காக

பெயர் : திருமதி N.W.G.D. சுஜுவனி, பணிப்பாளர் ( பொது மக்கள் முறைப்பாட்டு புலனாய்வு) மற்றும் தகவல் உத்தியோகத்தர்

தொலைபேசி : 0112166515

முகவரி : தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கட்டிட இல. 09, BMICH, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.

தொலைநகல் : 0112166555

மின்னஞ்சல் : info@npc.gov.lk

பெயர் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்

நீங்கள் தகவல் உத்தியோகத்தரின் பதில் மூலம் திருப்தியடையாது விடின் ஆணைக்குழுவினால் பெயரிடப்பட்ட உத்தியோகத்தருக்கு மேன்முறையீடு செய்யவும்.

பெயர் : தமரா டி. பெரேரா செயலாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழு

முகவரி : தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கட்டிட இல. 09, BMICH, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.

தொலைபேசி : 0112166502

தொலைநகல் : 0112166577

மின்னஞ்சல் : info@npc.gov.lk

 

தொடர்புகள்

தலைமை அலுவலகம்

பொது

தொலைபேசி (+94) 11 2166500
தொலைநகல் (+94) 11 2166555
மின்னஞ்சல் info@npc.gov.lk
துரித அழைப்பு 1960 / 0710361010
முகவரி
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கட்டிட இலக்கம் 09, BMICH வளாகம், பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு 07, இலங்கை.

மேலதிக தகவல்கள்
தவிசாளர்: 0112166501
செயலாளர் : 0112166502
சிரேஷ்ட உதவிச் செயலாளர் : 0112166505
பணிப்பாளர், பொதுமக்கள் முறைப்பாட்டு விசாரணை : 0112166503
பிரதம கணக்காளர் : 0112166507

மாகாண அலுவலகங்கள்

மாகாண பணிப்பாளர் (மேற்கு) 0112166521
மாகாண பணிப்பாளர்(மேற்கு) 0112166522
மாகாண பணிப்பாளர் (சபரகமுவ) 0112166538
மாகாண பணிப்பாளர் (வடக்கு) 0112166535
மாகாண பணிப்பாளர் (கிழக்கு) 0112166533
மாகாண பணிப்பாளர் (வடமத்திய) 0112166531
மாகாண பணிப்பாளர் (வடமேற்கு) 0112166536
மாகாண பணிப்பாளர் (ஊவா) 0112166532
மாகாண பணிப்பாளர் (தெற்கு) 0112166534
மாகாண பணிப்பாளர் (மத்திய) 0112166537

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் விரிவடைவதனைத் தொடர்ந்து இந்த இணையதளத்தில் உள்ளடங்கும் தகவல்கள் மற்றும் உள்ளடக்கங்களை தொடர்ச்சியாக இற்றைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது

 

அறிவிப்புகள்

1. பதிவிறக்கங்கள்

அ. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் ஆக்கப்பட்ட விதிகள் (அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை 2345/45)

ஆ. பொது மக்கள் முறைப்பாட்டு விசாரணை தொடர்பான செயற்பாட்டு விதிகள் (அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை 2345/46)

எ. தத்துவங்கள் கையளிப்பு (அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை 2341/51)